சினிமா துளிகள்

``அஜித், மிக சிறந்த மனிதர்!'' + "||" + "Ajith is the best man!"

``அஜித், மிக சிறந்த மனிதர்!''

``அஜித், மிக சிறந்த மனிதர்!''
அஜித் நடித்த `விஸ்வாசம்’ படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவர் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது.

அஜித்துடன் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது அஜித்துடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்னார். ``அஜித், பக்கா ஜென்டில்மேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் நின்று கொண்டிருந்தேன்.

அதை கவனித்த அஜித் என்னை, ``சிஸ்டர்'' என்று அழைத்து, எழுந்து நின்று மரியாதை செய்தார். ஒரு நாற்காலி கொண்டுவர சொல்லி, உட்கார வைத்தார். நான் உட்கார்ந்த பிறகே அவர் உட்கார்ந்தார். இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் ஒரு கதாநாயகன், இப்படி மரியாதை செய்ய தேவையில்லை. உண்மையிலேயே அஜித் மிக சிறந்த மனிதர்'' என்று புகழ்ந்தார், ஆண்ட்ரியா!