சினிமா துளிகள்

விஜய் படத்துக்காக ஆண்ட்ரியா சண்டை பயிற்சி! + "||" + Andrea fighting training

விஜய் படத்துக்காக ஆண்ட்ரியா சண்டை பயிற்சி!

விஜய் படத்துக்காக ஆண்ட்ரியா சண்டை பயிற்சி!
விஜய் படத்துக்காக ஆண்ட்ரியா சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.
விஜய் நடித்து வரும் 64-வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், ஆண்ட்ரியா நடிக்கிறார். அவருக்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தில், அவருக்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. சண்டை காட்சிகளில் நடிக்க அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் படம், தமிழ் புத்தாண்டு விருந்தாக திரைக்கு வர இருக்கிறது!