முதல் படத்திலேயே பெண் வேடம் போட்ட கதாநாயகன்!


முதல் படத்திலேயே பெண் வேடம் போட்ட கதாநாயகன்!
x
தினத்தந்தி 9 March 2020 10:45 PM GMT (Updated: 9 March 2020 1:21 PM GMT)

‘கால் டாக்சி’ டிரைவராக பணிபுரிந்த கெவின் என்ற இளைஞர், ‘கடத்தல்காரன்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார்.

3 படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கும் எஸ்.குமார் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டாராக அறிமுகம் ஆகிறார். இது, நகைச்சுவை  படமாக தயாராகி வருகிறது. இதுபற்றி டைரக்டர் எஸ்.குமார் கூறியதாவது:–

‘‘திருடுவதை குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு கிராம வாசிகள். யார், எந்த பொருளை திருடினாலும் கிராமவாசிகள் அனைவரும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது இவர் களின் கொள்கை. ஒரு திருமண வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடுவதுடன், மணமகளான கதாநாயகியையும் தூக்கி சென்று விடுகிறார்கள்.

நகைகளை பங்கிட்டுக் கொண்டவர்கள், மணமகளை எப்படி பங்கிடுவது என்று யோசிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மணமகளை மீட்க, காதலரான கதாநாயகன் பெண் வேடம் போட்டு அந்த கிராமத்துக்குள் நுழைகிறார். அவர் மணமகளை மீட்டாரா, இல்லையா? என்பது கதை.

இதில், கெவின் ஜோடியாக ரேணு சவுந்தர் என்ற மலையாள நடிகை நடித்து இருக்கிறார். பிரயா, பெனி, பெலிக்ஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கூடல் நகர், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.’’

Next Story