சினிமா துளிகள்

அவதார் 4 பாகங்கள் பட்ஜெட் ரூ.7,500 கோடி + "||" + The Avatar 4 accessories budget is Rs 7,500 crore

அவதார் 4 பாகங்கள் பட்ஜெட் ரூ.7,500 கோடி

அவதார் 4 பாகங்கள் பட்ஜெட் ரூ.7,500 கோடி
அவதார் 4 பாகங்கள் பட்ஜெட் ரூ.7,500 கோடி
சென்னை,

டைட்டானிக் படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த படம் ‘அவதார்’. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. இதற்கு 3 ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன. அடுத்தடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் தயாராகும் என்று அறிவித்தனர். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் பாகம் திரைக்கு வரும் என்று அறிவித்து, பின்னர் தேதியை 2021 டிசம்பர் 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதுபோல் அவதார் 3-ம் பாகம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியும், அவதார் 4-ம் பாகம் 2025 டிசம்பர் 19-ந்தேதியும், அவதார் 5-ம் பாகம் 2027 டிசம்பர் 17-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த 4 பாகங்களுக்கான மொத்த பட்ஜெட் ரூ.7500 கோடி என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்தில் அவதார் படத்துக்கான அரங்குகள் அமைத்து ஜேம்ஸ் கேமரூன் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்களையும் பட நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. தண்ணீருக்குள் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.