சினிமா துளிகள்

குகநாதனின் அடுத்த படத்திலும் யோகிபாபு + "||" + Yogi Babu in Kuganathans next film too

குகநாதனின் அடுத்த படத்திலும் யோகிபாபு

குகநாதனின் அடுத்த படத்திலும் யோகிபாபு
வி.சி.குகநாதனின் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புகழ்மணி இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
சூட்டோடு சூடாக குகநாதன் அடுத்த படத்தை உடனே தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு யோகிபாபு ‘அட்வான்ஸ்’ வாங்கியிருக்கிறார்.

“எப்ப கால்ஷிட் கேட்டாலும் தருகிறேன். ஓடிவந்து நடிக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்து இருக்கிறார்.


அவருடைய ஆர்வத்தையும், நேர்மையையும் குகநாதன் பாராட்டுகிறார். யோகிபாபு திருமணத்துக்கு முன், ஓய்வே எடுத்துக் கொள்ளாமல் இரவு-பகலாக நடித்து வந்தார். திருமணத்துக்குப்பின், அவர் வேலை செய்கிற நேரத்தை குறைத்துக் கொண்டாராம்.