பிரபல நடிகர் மரணம்


பிரபல நடிகர் மரணம்
x
தினத்தந்தி 20 Dec 2020 9:30 PM GMT (Updated: 20 Dec 2020 7:17 PM GMT)

பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான புடல் கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைந்தார்.

இவர் புரொபசர், நிர்ணயா, அரிஷினா கும்குமா, பல் நன் மகா உள்பட ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ஏரடு தண்டேயா மெலே, சீதாஞ்சனேயா, லாஞ்சா சாம்ராஜ்யா, சுபலங்கா, ஒலவினா கனிகே உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். கிருஷ்ணமூர்த்திக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. மரணம் அடைந்த கிருஷ்ணமூர்த்திக்கு தனலட்சுமி என்ற மனைவியும், விஸ்வஸ் என்ற மகனும், பாவனா என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த வருடம் ஏற்கனவே கன்னட திரையுலகை சேர்ந்த சிரஞ்சீவி சார்ஜா, சந்தம்மா, ராக்லைன் சுதாகர் உள்ளிட்ட சிலர் மரணம் அடைந்துள்ளனர்.

Next Story