சினிமா துளிகள்

சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறை பயிற்சி + "||" + Children produced by Surya To star in the film To the son of Arun Vijay training

சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறை பயிற்சி

சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறை பயிற்சி
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது.
இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான்.

சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்.

ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”.