சினிமா துளிகள்

இளையராஜா இசையில் பொன்னியின் செல்வன் வெப் தொடராகிறது + "||" + In the music of Ilayaraja Ponniyin Selvan The web continues

இளையராஜா இசையில் பொன்னியின் செல்வன் வெப் தொடராகிறது

இளையராஜா இசையில் பொன்னியின் செல்வன் வெப் தொடராகிறது
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக்கி வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெப் தொடராகவும் தயாராக உள்ளது.
இந்த தொடருக்கு 'சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்' என்று பெயர் வைத்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி டைரக்டும் செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் பல விளம்பர படங்களை இயக்கியவர். 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.எஸ்.பிரசாத்துடன் பணியாற்றியும் இருக்கிறார். அவர் கூறும்போது, “1979-களில் இருந்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சிகள் நடக்காமல் போனதால் பொன்னியின் செல்வன் தொடருக்கு சிரஞ்சீவி என்ற பெயரையும் இணைத்துள்ளேன். திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தை பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். இந்த வெப் தொடர் 4 மாதங்கள் ஒளிபரப்பாகும். வெப் தொடருக்கு சாபுசிரில் கலை இயக்குனராகவும் ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். எட்டர் நிட்டி மோஷன் கிராப்ட் மற்றும் எட்டர் நிட்டி ஸ்டார் தயாரிக்கும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மணிக்குறவன்
இளையராஜா இசையில் ‘மதுரை மணிக்குறவன்’