சினிமா துளிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நடிகையின் அனுபவம் + "||" + The experience of a young actress suffering from corona infection

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நடிகையின் அனுபவம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நடிகையின் அனுபவம்
பிரபல மலையாள இளம் நடிகை சானியா அய்யப்பன். இவர் மோகன்லாலின் லூசிபர் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுரஜ் டாம் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சானியா அய்யப்பனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி இருக்கிறார். இதுகுறித்து வலைத்தளத்தில் சானியா அய்யப்பன் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் அதிர்ந்தேன். இதை எதிர்பார்க்கவில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை நினைத்து கவலை ஏற்பட்டது. தலைவலி இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. டி.வி.யில் படம் பார்க்கமுடியாத அளவுக்கு பார்வை குறைந்தது. கொரோனா பாதித்த சூழ்நிலையில் யாரும் உதவி செய்ய முடியாது. மறுநாள் கண்விழிப்பேனா என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு இருக்கிறேன். எனவே எச்சரிக்கையாக இருங்கள். விதிமுறைகளை கடைப்பிடித்து கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்
மராட்டியத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த கொரோனா நோயாளியான பெண்ணின் உறவினர்கள் ரிசப்சன் பகுதியை தீ வைத்து கொளுத்தினர்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 138 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 134 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.