சினிமா துளிகள்

ரூ.27 லட்சம் மோசடி புகார்: சன்னி லியோனிடம் போலீஸ் விசாரணை + "||" + Rs 27 lakh fraud complaint To Sunny Leone Police investigation

ரூ.27 லட்சம் மோசடி புகார்: சன்னி லியோனிடம் போலீஸ் விசாரணை

ரூ.27 லட்சம் மோசடி புகார்: சன்னி லியோனிடம் போலீஸ் விசாரணை
பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் குடும்பத்துடன் கேரளா சென்று இருக்கிறார். அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஷியாஸ் என்பவர் சன்னிலியோன் மீது போலீசில் மோசடி புகார் அளித்தார். மனுவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்த சன்னிலியோன் தன்னிடம் ரூ.27 லட்சம் வாங்கினார். ஆனால் ஒப்புக்கொண்டபடி அந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தர மறுக்கிறார் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து சன்னிலியோனிடம் கேரள போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது சொன்ன தேதியில் ஷியாஸ் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் ஐந்து தடவை தேதியை மாற்றி கொடுத்தும் குறிப்பிட்ட தேதியில் நிகழ்ச்சியை நடத்தாததால் எனது கால்ஷீட் வீணாகி விட்டது என்றும் தெரிவித்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்தினால் கலந்து கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.