தமிழ் படத்தில் நடிக்க மல்லிகா செராவத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம்


தமிழ் படத்தில் நடிக்க மல்லிகா செராவத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:41 PM GMT (Updated: 27 Feb 2021 11:41 PM GMT)

நீண்ட பல வருட இடைவெளிக்கு பின் அவர், ‘பாம்பாட்டம்’ என்ற தமிழ் படத்தில், மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல இந்தி நடிகை மல்லிகா செராவத், மணிரத்னம் இயக்கிய ‘குரு’, சிலம்பரசனுடன் ‘ஒஸ்தி’ ஆகிய 2 தமிழ் படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். நீண்ட பல வருட இடைவெளிக்கு பின் அவர், ‘பாம்பாட்டம்’ என்ற தமிழ் படத்தில், மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது:-

‘‘பாம்பாட்டம், வரலாற்று பின்னணியிலான திகில் படம். 1800, 1947, 1970 ஆகிய 3 காலகட்டத்தில் கதை சம்பவங்கள் நடக்கின்றன. ஜீவன் கதாநாயகனாகவும், யாசிகா ஆனந்த், ரித்திகாசென் ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள்.

கதையில், ஒரு ராணி கதாபாத்திரம் முக்கிய இடம்பெறுகிறது. அதில் வித்தியாசமான முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகை தேவைப்பட்டார். இந்தி நடிகை மல்லிகா செராவத்தை அணுகி கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்து இருந்தது. உடனே நடிக்க சம்மதித்தார். படத்துக்காக அவர் 55 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார். நாளை (திங்கட்கிழமை) முதல் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் மல்லிகா செராவத் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. படப்பிடிப்பில் 500 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. வி.பழனிவேல் தயாரிக்கிறார்.’’

Next Story