சினிமா துளிகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்? + "||" + Problem for Sivakarthikeyan film?

சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்?

சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முயன்று ஊரடங்கினால் தடைபட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்துள்ளதாகவும் சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர் ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில். ''முழுமையாக தயாரான டாக்டர் படத்துடன் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் வெளியாக முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயமற்ற நிலையில் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
2. எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி
எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி.
3. வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்.
4. படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்
சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார்.
5. திரைப்படங்கள் தியேட்டர்களில் தான் ரிலீசாக வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம்
திரைப்படங்கள் வெளியானால் தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.