சினிமா துளிகள்

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் + "||" + Nayanthara - Vignesh Sivan who performed Sami darshan in the temple

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கவர்னர் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார்.
2. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்துள்ளார்.
3. குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குருப்பெயர்ச்சியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.