சினிமா துளிகள்

விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார் + "||" + Ilayaraja complains about Vijay Sethupathi film crew

விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்

விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.
காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் டைரக்டு செய்தார். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.


கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர்.

இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 108 ஆம்புலன்ஸ்கள் மீதான புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
2. பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
3. மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவி - உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்
தஞ்சை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.
4. இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - இளையராஜா உருக்கம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் காமகோடியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5. தம்பி ராமையா மற்றும் மகன் மீது போலீசில் புகார்
தம்பி ராமையா மற்றும் மகன் நடிகர் உமாபதி மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சரவணன் புகார் மனு அளித்திருக்கிறார்.