சினிமா துளிகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன் + "||" + Tanya Ravichandran is the partner of the famous actor

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்
விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன், பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
நடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை 'பூலோகம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


இப்படத்திற்கு இருகதாநாயகிகள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்கிறார்.  படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
3. ஜெயம்ரவி படத்தில் நடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்..!
நடிகர் ஜெயம்ரவியின் அடுத்த திரைப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
4. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மனிஷா யாதவ்
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
5. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.