வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்


வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:42 PM IST (Updated: 10 Jan 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
1 More update

Next Story