சினிமா துளிகள்

ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து + "||" + We are living in a dangerous situation ... Rajinikanth Pongal greetings

ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டுருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் தின நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’ மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் 5¾ லட்சம் பேர் பஸ்களில் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 5¾ லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
3. மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று நடைபெற்றது.
4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
5. ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.