பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது - அறிவித்த பிரபல நடிகர்


பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது - அறிவித்த பிரபல நடிகர்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:25 PM GMT (Updated: 18 Jan 2022 6:25 PM GMT)

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்று அவருடைய வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பிரபல நடிகர்.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும்.. விரைவில் வெளியிடுங்கள் என்று அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.

இதற்கு முன் பீஸ்ட் படத்தில் 'கில்லி' பட பாடல் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story