கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னிக்கு வீட்டில் இருந்து வந்தவுடன் சோதனை வந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் 'ரெட்டை வால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் 6 பேர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள தீவுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ராமேசுவரத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடிக்கு சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.