நடிகையான பாடகி


நடிகையான பாடகி
x

பிரபல கிராமிய இசைப் பாடகி ராஜலட்சுமி செந்தில் `லைசென்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாகி உள்ளார்.

பிரபல கிராமிய இசைப் பாடகி ராஜலட்சுமி செந்தில். இவர் சினிமாவில் பாடிய `சின்ன மச்சான்', `சாமி என் சாமி' ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. ராஜலட்சுமி தற்போது `லைசென்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாகி உள்ளார். தந்தை, மகள் பாசப் பின்னணியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் படமாக தயாராகிறது. இந்தப் படத்தை கணபதி பாலமுருகன் எழுதி இயக்குகிறார். இவர் `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தை இயக்கியவர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் பாரத் அறிமுகமாகிறார். மதுரை ரிஷி, அதிதி பாலமுருகன், கிருஷ்ணா உள்பட பலர் நடிக்கின்றனர். இளஞ்செழியன் தயாரிக் கிறார்.


Next Story