கமல்ஹாசன்-மம்முட்டி இணைவது எப்போது?


கமல்ஹாசன்-மம்முட்டி இணைவது எப்போது?
x

‘விக்ரம் படத்தை பார்த்தபின் மம்முட்டி நிச்சயம் என்னுடன் இணைந்து நடிக்க சம்மதிப்பார் என நம்புகிறேன்’ என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் மோகன்லால் உள்பட பிறமொழி கதாநாயகர்கள் பலர் இணைந்து நடித்து இருக்கிறார்கள். மம்முட்டி மட்டும் இன்னும் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் இணைந்து நடிப்பதற்கான கதைக்காக காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற கமல்ஹாசன், மம்முட்டியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டது.


Next Story