கட்டப்பாவ காணோம்


கட்டப்பாவ காணோம்
x
தினத்தந்தி 16 Feb 2017 1:15 PM IST (Updated: 16 Feb 2017 1:15 PM IST)
t-max-icont-min-icon

'பாகுபலி' படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்து பரபரப்பை ஏற்படுத்திய கதாபாத்திரம், 'கட்டப்பா.' இப்போது அவருடைய மகன் சிபிராஜ், 'கட்டப்பாவ காணோம்' என்ற பெயரில், ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிபிராஜ் நடிக்கும் படத்தில் ஒரு மீனின் பெயர், 'கட்டப்பா'

'நாய்கள் ஜாக்கிரதை,' 'ஜாக்சன் துரை' என மாறுபட்ட கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கும் சிபிராஜ், 'கட்டப்பாவ காணோம்' படத்தில், இதுவரை நடித்திராத ஒரு வேடம் ஏற்றுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி, 'கட்டப்பா' என்பது ஒரு மீனின் பெயர். படத்தில் பங்கேற்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம், 'கட்டப்பா' என்கிற அந்த மீன்தான். இது, அதிர்ஷ்டமான மீனாக கதையில் இடம்பெறுகிறது. இந்த மீன் யாரிடம் இருக் கிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்ட காற்று அடிக்கும் என்பதால், 'கட்டப்பா'வை கைப்பற்ற கடும் போட்டி நடக்கிறது. அந்த போட்டி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

படத்தில், சிபிராஜுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், லிவிங்ஸ்டன், யோகி பாபு, திருமுருகன், காளி வெங்கட், மைம் கோபி, சாந்தினி, சேது மற்றும் பலரும் நடிக்கிறார்கள். மணி செய்யோன் டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.

1 More update

Next Story