யாக்கை


யாக்கை
x
தினத்தந்தி 27 Feb 2017 4:02 PM IST (Updated: 27 Feb 2017 4:01 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் குரு சோமசுந்தரம். இவரது நடிப்புக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டு கிடைத்தது.

தற்போது “யாக்கை” என்ற படத்தில் வில்லனாக குரு சோமசுந்தரம் நடிக்கிறார். குழந்தை வேல்லப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யாக்கை’ படத்தை பிரிம் பிச்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரிக்கிறார். கிருஷ்ணா, சுவாதி உள்பட பலர் நடிக்கும் யாக்கை படத்துக்கு யுவன்‌ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதுபற்றி கூறிய இயக்குனர் குழந்தை வேலப்பன், “நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் எங்கள் ‘யாக்கை’ படத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் இந்த படத்தில் அற்புதமாக நடித்து வருகிறார். அவருடைய இந்த வில்லன் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும்” என்றார்.

1 More update

Next Story