சத்ரியன்


சத்ரியன்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:39 PM IST (Updated: 5 Jun 2017 3:39 PM IST)
t-max-icont-min-icon

விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

`இதயம்', ‘கிழக்குவாசல்’, ‘பகல்நிலவு’, ‘மூன்றாம்பிறை’ போன்ற படங்களை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில்,  எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க,விக்ரம்பிரபு நடிக்கும் படம் ‘சத்ரியன்’.

இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ்,ஆர்.கே.விஜய்முருகன், கதிர்,  சவுந்தர்ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

“உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பின்புலத்தில் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான  காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக ‘சத்ரியன்’ தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இசை- யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவு- சிவக்குமார் விஜயன்,கலை-ஆர்.கே.விஜய் முருகன், படத்தொகுப்பு-வெங்கட்ராம் மோகன்,  பாடல்கள் -வைரமுத்து, சினேகன்,விவேக்,சண்டை- அன்பறிவ்,நடனம்-செரிப், தயாரிப்பு- செந்தில் தியாகராஜன், அர்ஜுன்  தியாகராஜன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.ஆர். பிரபாகரன்.
1 More update

Next Story