2-வது ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 221/2


2-வது ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 221/2
x
தினத்தந்தி 16 Dec 2021 11:44 AM GMT (Updated: 2021-12-16T17:14:53+05:30)

மார்னஸ் லபுஸ்சேன் 95 ரன்களுடனும் ,ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீராக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின்  மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர்-லபுஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

சதத்தை நெருங்கிய வார்னர் , 95 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில்  ஸ்டுவர்ட் பிராட்யிடம் கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தார். 

இதன் பிறகு லபுஸ்சேன் உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் லபுஸ்சேன் 95 ரன்களுடனும் , ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story