தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல்....?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Dec 2021 9:05 AM GMT (Updated: 2021-12-18T14:35:16+05:30)

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழலில் டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகினாா். அவருக்குப் பதிலாக இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் பிரியங்க் பாஞ்சல் பிரதான அணியில் இணைந்தார். ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டனாக எவரையும் பிசிசிஐ அறிவிக்காமல் இருந்து வந்தது.  

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா இல்லாத நிலையில் டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலுடன் இணைந்து மயங்க் அகா்வால் இன்னிங்சை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Next Story