"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தான் எப்போதும் என் முன்னுரிமை " - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 3 May 2022 5:58 PM GMT (Updated: 2022-05-03T23:28:43+05:30)

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஜோ ரூட் அறிவித்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த  இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்தது.இதனால் ஜோ ரூட் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து ஸ்டோக்ஸ் கூறுகையில், " டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் என்னுடைய முன்னுரிமையாக இருக்கும். இது எனக்கு ஒரு உற்சாகமான தருணம். ஆனால்  கடந்த சில ஆண்டுகளை பொறுத்தவரை எனக்கு நிறைய சவால்களும் இருந்தன.

ஆனால் இனி கடந்த காலத்தில் நடந்தது குறித்து கவனம் செலுத்தப்போவதில்லை. இனி முன்னோக்கிச் செல்வதில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்." என அவர் தெரிவித்தார்.

Next Story