ராஜாக்கள்மங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் சித்திரை உத்திர திருவிழா


ராஜாக்கள்மங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவில் சித்திரை உத்திர திருவிழா
x
தினத்தந்தி 29 April 2017 8:00 PM GMT (Updated: 29 April 2017 1:21 PM GMT)

வள்ளியூர் அருகே உள்ள ராஜாக்கள்மங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே உள்ள ராஜாக்கள்மங்களம் பெருவேம்புடையார் சாஸ்தா கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை 10.55 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவில் சுவாமி ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமி ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மதியம் கும்பாபிஷேக பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து வருகிற 6–ந் தேதி (சனிக்கிழமை) சித்திரை உத்திர திருவிழா நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை, மதியம் கும்பாபிஷேக பூஜை, மாலை 5 மணிக்கு சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு சாயரட்சை பூஜை உள்ளிட்டவைகள் நடக்கிறது. இரவு 2 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன், ஆய்வாளர் சீதாலட்சுமி, செயல் அலுவலர் காந்திமதி, மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story