ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளம்பெண் மானபங்கம் போதை வாலிபர் கைது


ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளம்பெண் மானபங்கம் போதை வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2017 4:45 AM IST (Updated: 18 Oct 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளம்பெண் மானபங்கம் செய்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சாந்தாகுருசை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அந்தேரி மோக்ரேவாடி பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த இளம்பெண் வாலிபரை பிடித்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். இதையடுத்து அவர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது பெயர் ஜித்தேந்திரா யாதே (வயது22) என்பது தெரியவந்தது.

அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story