3 அடி உயரம் கொண்டவர்கள் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து


3 அடி உயரம் கொண்டவர்கள் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Nov 2017 9:30 PM GMT (Updated: 12 Nov 2017 7:41 PM GMT)

3 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் நேரில் சென்று அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

சிக்கமகளூரு,

3 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் நேரில் சென்று அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

மாற்றுத்திறனாளி ஜோடி

சிக்கமகளூரு தாலுகா கலசாபுரா பகுதியை சேர்ந்தவர் புனித் (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் 3 அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார். இந்த நிலையில், புனித்திற்கு அவருடைய குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் பல இடங்களில் புனித்துக்கு பெண் பார்த்துள்ளனர். ஆனால், புனித் குள்ளமாக இருப்பதால் அவருக்கு எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால், அவருடைய குடும்பத்தினர் மிகுந்த துக்கத்தில் இருந்து வந்தனர்.

இதனால், புனித் உயரம் கொண்ட ஒரு பெண்ணை அவர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில், உறவினர் ஒருவர் மூலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா அய்யனஹள்ளி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான லாவண்யா (22) என்பவர் 3 அடி உயரத்தில் இருப்பது தெரியவந்தது.

திருமணம்

ஆனால் அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சாதி வேறாக இருந்தாலும் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க புனித்தின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி புனித்தின் பெற்றோர், லாவண்யாவின் பெற்றோரிடம் இதுபற்றி பேசினார்கள். இந்த திருமணத்துக்கு லாவண்யாவின் பெற்றோரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை கலசாபுராவில் உள்ள புனித்தின் வீட்டில் வைத்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை மணமகன் புனித், மணமகள் லாவண்யாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

வாழ்த்து மழை பொழிந்தனர்

இதையடுத்து திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். தாங்கள் வாங்கி வந்த ‘கிப்ட்’களையும் அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தினர். பின்னர் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இதையடுத்து மாலையில் அவர்களுக்கு வரவேற்பும் நடந்தது.


Next Story