ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்தக்கோரி சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்தக்கோரி சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:30 PM GMT (Updated: 13 Dec 2017 9:00 PM GMT)

ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்தக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்தக்கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். உளுந்தம் பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுவினியோக திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, தையல் கலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாலதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் தர்மலிங்கம், பால் விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, கூட்டுறவு சங்க மாநில இணை செயலாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story