மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் கலெக்டர் தகவல் + "||" + Collector's information strengthened in Nellai district temples

நெல்லை மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்ட கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நெல்லை,

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சார்பில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சார்பில் நெல்லையப்பர் கோவில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுடன் இணைந்து சுமைல் பவுண்டேசன் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் கோவிலை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவிலில் உள்ள ஆறு மண்டபங்களிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில் களில் தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்கட்டமைப்புகள் தொடர்பான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நிகழ்ச்சியில், இஸ்ரோ மையத்தின் தலைமை என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை தாசில்தார் கணேசன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி உள்பட பலர் கலந்து கொாண்டனர். மதுரை மீனாட் சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.