செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை


செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2018 4:15 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால், செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சிமிழி கிராமத்தில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இந்த சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சிமிழி கிராமத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயத்துக்கு பயன்படாத நிலத்தில் இருந்து மண் எடுத்து செங்கல் சூளைகளை நடத்தி வருகிறோம். இதற்காக பொக்லின் எந்திரத்தின் மூலம் மண் எடுத்து வந்தோம். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மண் எடுப்பதை தடுத்து வருகிறார்.

விவசாயம் செய்ய முடியாத நிலையில் செங்கல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக் கிறோம். இந்த தொழிலை ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே செய்ய முடியும். எனவே செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story