மாவட்ட செய்திகள்

அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Ambulance employees demonstrated against the administration which did not fully pay the government money

அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு வழங்கிய பணத்தை முழுமையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 2017-ம் ஆண்டு வருடாந்திர ஊதிய உயர்விற்கு தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக, முறையாக வழங்கவில்லை. மேலும் நிர்வாகம், பொதுமக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களை வேலை நிறுத்தம் நோக்கி தள்ளிவிட்டு தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அதன் வாயிலாக ஆதாயம் தேட முயற்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர், அரசு செயலாளர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றுக்கு புகார்கள் அனுப்பி உள்ளோம். மேலும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். ஆனால் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. எனவே சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் மன்றத்தில் முறையிட்டு மக்களின் பங்களிப்போடு தக்க பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அனுபாகவி, தமயந்தி மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.