மாவட்ட செய்திகள்

ரூ.400 கோடி மோசடி தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர் + "||" + Four persons including Rs 400 crore fraud were arrested

ரூ.400 கோடி மோசடி தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர்

ரூ.400 கோடி மோசடி தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர்
சாகர் என்பவர் ஸ்ரீராம் சமுத்ரா என்ற பெயரில் நிதிநிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். இவர் 2 மடங்கு பணம் திருப்பி தருவதாக கூறி 4 ஆயிரம் பேரிடம் சுமார் ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தானே,

பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து  அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சாகர், அவரது மனைவி அங்கா மற்றும் உறவினர் 2 பேரை கைது செய்தனர். மேலும் நிதிநிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். இந்த மோசடி குறித்து 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.