மாவட்ட செய்திகள்

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Liberation factions in Kadaloor demonstrated

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,

கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். மண்டல அமைப்பு செயலாளர் சு.திருமாறன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன், கதிர்வாணன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை முதன்மை செயலாளர் பாவாணன், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கெய்க்வாட்பாபு, தொகுதி துணைச்செயலாளர் நாகவேந்தன், இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் மார்க்கெட் தாஸ், முன்னாள் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நிரபு, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் பாாத்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.