மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம் + "||" + Nellaiyappar temple Aani festival: Work on essence creation

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம்

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடக்கம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு தேர்களில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனித்திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித்திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆனித்திருவிழா வருகிற 19–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். காலை, இரவு நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

நெல்லையப்பர் கோவிலில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர் என மொத்தம் 5 தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் அனைத்தும் கீழ ரதவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. திருவிழாவையொட்டி தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கூரைகள் பிரித்து அகற்றப்பட்டு உள்ளன.

சாரம் அமைக்கும் பணி

பின்னர் தேர்களை, தேரோட்டத்துக்கு தயார் படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று அம்பாள் தேரை அலங்காரப்படுத்துவதற்கு கம்புகளை கொண்டு தேரில் சாரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் திரளான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அம்பாள் தேரை தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர்களுக்கு சாரம் கட்டும் பணியும் இறுதியாக சுவாமி தேருக்கு சாரம் கட்டும் பணியும், கும்பம் வைக்கும் பணியும் நடைபெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
2. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.
3. சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4. சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினை: கேரள அரசை கண்டித்து இந்துமக்கள் கட்சியினர் பஸ் மறியல், 17 பேர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து உடுமலையில் பஸ் மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை (தமிழகம்) சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. திருவள்ளூர் அருகே கோவிலில் நந்தி சிலை திருட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருவள்ளூர் அருகே கோவிலில் நந்தி சிலை திருடப்பட்டது. நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.