மாவட்ட செய்திகள்

சீராக குடிநீர் வழங்க கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Municipality office in Duraiyur before the public road blockade demanding drinking water supply regularly

சீராக குடிநீர் வழங்க கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வழங்க கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
சீராக குடிநீர் வழங்கக்கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
துறையூர்,

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்். இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள துறையூர்-பெரம்பலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக துறையூர்-பெரம்பலூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2. மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்
கறம்பக்குடி அருகே குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
4. முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியல்
முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
அம்பேத்கர் பதா கையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.