மாவட்ட செய்திகள்

மாநில உரிமையை போராடி மீட்போம் கனிமொழி எம்.பி. பேச்சு + "||" + Restore the state rights and restore it Kanimozhi MP speech

மாநில உரிமையை போராடி மீட்போம் கனிமொழி எம்.பி. பேச்சு

மாநில உரிமையை போராடி மீட்போம் கனிமொழி எம்.பி. பேச்சு
மாநில உரிமையை போராடி மீட்போம் என கனிமொழி எம்.பி. கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. மகளிர் அணி மற்றும் பிரசார குழு சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க தலைவர் கருணாநிதி தனக்கு எதிர்ப்பு வந்தாலும், விமர்சனம் செய்தாலும் தான் சொன்னான வார்த்தையில் இருந்து பின் வாங்க மாட்டார். அதேபோல அவர் எழுத்திலும் அவரது செயலிலும் எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்கியதே இல்லை. அதற்கு காரணம் மக்களுக்காகவே அவரது சொல்லும் செயலும், எழுத்தும் இருந்தது.

தூத்துக்குடியில் வாழும் மக்கள் தன்மண்ணில் வாழுவதற்காக, காற்றை சுவாசிப்பதற்காக, குடிநீரை பாதுகாப்பாக தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடினார்கள். ஆனால் அவர்களை பயமுறுத்தி போராட்டத்தை தடுக்க வேண்டும் என 13 பேரை சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் எழுத்து, பேச்சு சுதந்திரம் இல்லை. குறிப்பாக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்ன உடை உடுத்த வேண்டும் என்பது கூட இந்த அரசு சொல்லும் நிலை உள்ளது. இது தமிழகத்தில் நடந்த எமர்ஜென்சியை விட மோசமாக உள்ளது. போராட்டம் நடத்தி உரிமையை பெற வேண்டிய நிலை உள்ளது. மாநில அரசு தன் உரிமையை கூட செயல்படுத்தவில்லை. மொழி கல்வியில் மத்திய அரசு தலையிடு உள்ளது? ஆகவே இந்த மண் கூட நமக்கு பாதுகாப்பாக இருக்காது. நீட் தேர்வால் தமிழக மாணவிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநில உரிமையை மீட்க வேண்டும். மாநில உரிமையை போராடி மீட்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் லஞ்ச ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. மன்னார்குடி குடும்பத்தினர் புது கட்சிகள் தொடங்குகிறார்கள். அவர்கள் சசிகலா பெயரை சொல்லுகிறார்கள். சசிகலா யார்? மக்களுக்காக போராடியா ஜெயிலுக்கு சென்றுள்ளார்? இந்த அரசுகள் மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். அதை தி.மு.க. கூட்டணிக்கு சாதமாக்க வேண்டும் என்றார்.

இதில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் துணைவியரும், கனிமொழி எம்.பி.யின் தாயாருமான ராஜாத்தி அம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, பேராசிரியை பர்வீன் சுல்தானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்
58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
2. காதலன் வீட்டு வாசலில் பட்டதாரி பெண் தர்ணா
பெண்ணாடம் அருகே காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
3. தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு - கனிமொழி எம்.பி பேட்டி
தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு என்று திருப்பூரில் கனிமொழி எம்.பி. கூறினார்.
4. வாஜ்பாய் உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் சென்று விசாரிப்பு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும்: கனிமொழி எம்.பி
கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். #Kanimozhi