3 பெண் குழந்தைகளின் தந்தை, கள்ளக்காதலியுடன் ஓடியதாக புகார் போலீசார் விசாரணை


3 பெண் குழந்தைகளின் தந்தை, கள்ளக்காதலியுடன் ஓடியதாக புகார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2018 3:45 AM IST (Updated: 15 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புலியூரில் 3 பெண் குழந்தைகளின் தந்தை, கள்ளக்காதலியுடன் ஓடியதாக புகார் போலீசார் விசாரணை.

மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமம் பர்மா காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 42). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி நல்லம்மாள்(37). இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கந்தசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த நல்லம்மாள், கந்த சாமியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லம்மாளிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற கந்தசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. கந்தசாமியின் கள்ளக்காதலியையும் காணவில்லை. இதனால் அவர்கள் ஊரை விட்டு ஓடியதாக புகார் கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நல்லம்மாள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மங்களமேடு போலீசாருக்கு, கலெக்டர் உத்திரவிட்டார். அதன் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story