தீவில் பதுங்கி இருந்த இலங்கை வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது


தீவில் பதுங்கி இருந்த இலங்கை வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2018 11:00 PM GMT (Updated: 28 July 2018 8:59 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே சிங்கிலி தீவில் பதுங்கி இருந்த இலங்கை வாலிபர்கள் உள்பட 4 பேரை வனத்துறையினர் பிடித்தனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே சிங்கிலி தீவில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஏஜெண்டுகள் மண்டபம் முகாம் மீனவர் குடியிருப்பை சேர்ந்த சிவக்குமார்(வயது43), குஞ்சார் வலசையை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோரை வனத்துறையினர் பிடித்தனர். அங்குள்ள கடல் பகுதியில் நின்று இருந்த நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த மண்டபம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீப், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் இதே தீவில் சோதனையிட்டபோது அங்கு பதுங்கி இருந்த சென்னையில் தங்கிஇருந்த இலங்கையை சேர்ந்த ஜாய்சன்(27), ஜெயக்குமார்(28) ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கை வாலிபர்கள் 2 பேரையும் ஏஜெண்டுகள் கள்ளத்தனமாக இலங்கைக்கு அழைத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story