மாவட்ட செய்திகள்

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம + "||" + The human chain struggle against 8 way greenery

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம
8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

சென்னை– சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி கடந்த சில தினங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் வீரப்பத்திரன் உள்பட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.