மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் கடைகளும் அடைக்கப்பட்டன
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு மோட்டார் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடைகளும் அடைக்கப்பட்டது.
நாமக்கல்,
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ்நாடு மோட்டார் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநில பொதுக் குழு உறுப்பினர் சுப்பிரமணி யம் தலைமை தாங்கினார். இருசக்கர வாகன மெக்கானிக் மற்றும் நகர மோட்டார் சைக்கிள் அசோசியேசன் தலைவர் ரவிக்குமார், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சி.ஐ.டி.யு. தொழிற் சங்க தலைவர் சிங்காரம், செயலாளர் வேலுசாமி, இரு சக்கர வாகன மெக்கானிக் சங்க செயலாளர் சண்முக சுந்தரம், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி சங்கத்தின் தலைவர் சாமுண்டி சண்முகம் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மோட்டார் வாகன தொழிலை, பெரு நிறுவனங் களிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. இச்சட்டம் நிறைவேறினால், அரசு போக்குவரத்து, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ஒழிக்கப்படும் எனவும், மோட்டார் வாகன சார்பு தொழில்கள் முடக்கப்பட்டு, சுய வேலைவாய்ப்பின்றி, பொதுமக்கள் பாதிக்கப்படுவர் எனவும் பாதுகாப்பு குழுவினர் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகன மெக்கானிக் குகள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பட்டறைகள், 67 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத் திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ், லாரி, ஆட்டோ உள் ளிட்ட வாகனங்கள் ஓடின.
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெறக் கோரி ராசிபுரம் நகரத்தில் உள்ள இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகன மெக்கானிக் பட்டறைகள், பொருட்கள் விற்பனை கடைகள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், வாகன ங்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் நிறுவனத் தினர் கடையடைப்பு செய்தனர். இவர்கள் நாமக் கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story