தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 8 Aug 2018 4:00 AM IST (Updated: 8 Aug 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மானாமதுரை–உச்சிப்புளி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருச்சி– ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56829) நாளை(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் மானாமதுரை–ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், ராமேசுவரம்–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56830) நாளை ஒரு நாள் மட்டும் ராமேசுவரம்–மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, மதுரை–ராமேசுரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56721) நாளை ஒரு நாள் மட்டும் மானாமதுரை–ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், ராமேசுவரம்–மதுரை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56722) நாளை ஒரு நாள் மட்டும் ராமேசுவரம்–மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன், திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56822) இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி வரை திருச்சி–தஞ்சாவூர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை–நெல்லை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56821) இன்று முதல் வருகிற 31–ந் தேதி வரை தஞ்சாவூர்–திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story