மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை + "||" + Near Tirupathur Youth Strangled and killed

திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை

திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை
திருப்பத்தூர் அருகே வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அவரது உடல் கிடந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பெரியார்நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31) திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் நிறுத்தும் இடத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார்.


அப்போது திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ராஜ்குமாரை தங்களுடன் அழைத்துச்சென்றனர். வழக்கமாக இவ்வாறு வெளியே சென்றால் இரவு 10 மணிக்குள் ராஜ்குமார் வீடு திரும்பி விடுவார். ஆனால் நள்ளிரவை தாண்டியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் திருப்பத்தூரை அடுத்த பெரியகுனிச்சி அருகே கோவிந்தன் என்பவரது வீட்டின் பின்புறம் வாலிபர் ஒருவரின் பிணம் அனாதையாக கிடப்பது குறித்து மகேந்திரகுமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் பதறி அடித்துக்கொண்டு குடும்பத்தினருடன் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகன் ராஜ்குமார் என்பதை அறிந்து கதறினார். இது குறித்து அவர் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றினர்.

பிணமாக கிடந்த ராஜ்குமாரின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. அவரது மூக்கிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

ராஜ்குமாரை முன்விரோதம் காரணமாக யாரும் கொலை செய்தார்களா? அல்லது சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது நண்பர்களுக்குள் நடந்த மோதலில் அவர் கொலை செய்யப்பட்டரா? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு
சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது
ஆவடியில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அருகில் படுத்து தூங்கிய அவரது மகளும் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது
தாய்–மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
4. என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலை: காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்
என்ஜினீயரிங் மாணவரை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 3 மாத குழந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம் - கைதான மளிகைக்கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம்
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 3 மாதமே ஆன ஆண் குழந்தையை மளிகைக்கடைக்காரர் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.