வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற புதிய செயலியில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற புதிய செயலியில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2018 4:35 AM IST (Updated: 15 Aug 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற புதிய செயலியில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிபெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்ததற்கான சான்றிதழ், ஆண் குழந்தை இல்லாததற்கான சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வநிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் தற்போது இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொது இ-சேவை மையங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் தாமாகவே சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் யு.எம்.ஏ.என்.ஜி. என்ற செயலியை செல்போனில் இருந்து பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அனைத்து 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறுவதற்கு https://www.tnes-ev-ai.tn.gov.in/cit-iz-en/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story