காரைக்குடியில் நாளை நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா: சீமான் பங்கேற்கிறார்
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
காரைக்குடி,
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காரைக்குடி சூடாமணிபுரம் வடக்கு முதல் வீதியில் நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நாளை (24–ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், சிவகங்கை மண்டல செயலாளர் கோட்டைக்குமார் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பின்னர் அன்று மாலை பாண்டிய தியேட்டர் திடலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடக்கும் பழனிபாபா பேரவை தொடக்க விழாவிலும் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.