மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பயங்கரம் தடுப்புச்சுவர்–லாரியில் கார் மோதி விபத்து: வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம் + "||" + Tuticorin Preventive-lorry car Crash accident: A youth killed

தூத்துக்குடியில் பயங்கரம் தடுப்புச்சுவர்–லாரியில் கார் மோதி விபத்து: வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

தூத்துக்குடியில் பயங்கரம் 
தடுப்புச்சுவர்–லாரியில் கார் மோதி விபத்து: வாலிபர் பலி
மற்றொருவர் படுகாயம்
தூத்துக்குடியில் தடுப்புச்சுவர்–லாரியில் அடுத்தடுத்து கார் மோதி நொறுங்கிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடியில் தடுப்புச்சுவர்–லாரியில் அடுத்தடுத்து கார் மோதி நொறுங்கிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபர்

தூத்துக்குடி ராமசாமிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருடைய மகன் பாலமுருகன்(வயது 21). இவர், தனது நண்பர் நிகிலேசன்நகரை சேர்ந்த கந்தையாதாஸ் என்ற மகராஜன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் துறைமுக பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள எடைநிலையம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் கார் தடுப்புச்சுவரை தாண்டி சாலையில் உருண்டது. அப்போது எதிரே வந்து கொண்டு இருந்த ஒரு லாரி மீது மோதி நொறுங்கியது. இதில் பாலமுருகன், கந்தையாதாஸ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கந்தையாதாசுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜபிரபு வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி
பரமத்தி அருகே, சாலையை கடந்த தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
3. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. அரசு பஸ் மீது கார் மோதிய விவகாரம்: விபத்தில் சிக்கிய 2 பேர் கிணற்றில் பிணமாக மீட்பு
பல்லடம் அருகே அரசு பஸ் மோதிய விவகாரத்தில் விபத்தில் சிக்கிய 2 பேர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். போதையில் வழி தெரியாமல் சென்றவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்து விட்டது.
5. நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு
நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.

அதிகம் வாசிக்கப்பட்டவை