சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலை கட்டுமான பணி தீவிரம்


சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலை கட்டுமான பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:30 PM GMT (Updated: 11 Oct 2018 8:15 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலை கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தின் நான்கு நிலைகளில் கட்டுமான பணி நிறைவு பெற்றது.

பின்னர் ஐந்தாம் நிலை கட்டுவதற்காக கடந்த சில நாட்களாக சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து கீழே இருந்து கட்டுமான பொருட்கள் மேலே எடுத்து செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஐந்தாம் நிலை கட்டுவதற்கான பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ராஜகோபுரம் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story