திருவள்ளூரில் , விழிப்புணர்வு உறுதிமொழி


திருவள்ளூரில் , விழிப்புணர்வு உறுதிமொழி
x
தினத்தந்தி 12 Oct 2018 4:14 AM IST (Updated: 12 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர்.

இதில் சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொன்டனர்.

Next Story